சேலம்

கூடமலையில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

DIN

கெங்கவல்லி அருகே கூடமலையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 கெங்கவல்லி - தம்மம்பட்டி சாலையில் உள்ள கூடமலை ஊராட்சியில்  3, 9 மற்றும் 10 -ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். ஆனால் மற்ற வார்டுகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம். 
இதையடுத்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடமலை அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் பகுதியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் கெங்கவல்லி  போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.  இதனால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT