சேலம்

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக 23 பேர் கைது

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சேலத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன் மக்கள் அரசு கட்சியின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை திரண்டனர்.
   அப்போது,  பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.  இந்த வழக்கை சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  பின்னர்,  அவர்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் புறப்பட்டனர். 
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார்,  மாவட்டத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட 23 பேரைக் கைது செய்தனர்.
கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT