சேலம்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேருக்கு 47 ஆண்டு சிறையுடன் இரட்டை ஆயுள் தண்டனை

DIN

வாழப்பாடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேருக்கு தலா 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி ஒருவருக்கு,  மூன்று குழந்தைகள்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 14- ஆம் தேதி இரவு தொழிலாளியின் 10 வயது மகள்,  தனது சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.   அவரது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர்  மது அருந்திவிட்டு, கதவு இல்லாத வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கி சென்றனராம். கூட்டு வன்புணர்வு செய்தபோது,  இறந்த சிறுமியை ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சிறுமியின் பெற்றோர் அந்த ஊரையே காலி செய்துவிட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்குச் சென்றுவிட்டனர். 
கைதான 5 பேர்  மீதும் கூட்டு வன்புணர்வு, கொலை,  போக்சோ சட்டம் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.  குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பை வியாழக்கிழமைக்கு (மார்ச் 21) அளிக்கப்படும் என்றும்  நீதிபதி விஜயகுமாரி மார்ச் 19-இல்  தெரிவித்தார்.
இதில் 5 பேருக்கும் கூட்டு சதி (120 பி),  அத்துமீறி வீட்டில் புகுந்து குற்றம் புரிதல் (450), பலவந்தமாக கடத்தி செல்லுதல் (366) ஆகிய பிரிவுகளில் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், கடத்திச் செல்லுதல் (363), சாட்சியங்களை அளித்தல் (201) ஆகிய இரு பிரிவுகளுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரிவு 404-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை என 5 பேருக்கு தலா 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதுதவிர, கொலை மற்றும் போக்சோ 5/6 சட்டப் பிரிவு என இரு பிரிவுகளில் 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதில் 120 -பி பிரிவு தவிர ஒவ்வொரு பிரிவுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை கட்டத் தவறினால் 6 மாத கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் தனசேகரன் ஆஜரானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT