சேலம்

ஏடிஎம்-இல் பணம் நிரப்ப கொண்டு வந்த ரூ.1.21 கோடி பறிமுதல்

DIN

கெங்கவல்லி அருகே வீரகனூரில் ஏடிஎம்-இல் பணம் நிரப்பக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.21 கோடியை திங்கள்கிழமை மாலை ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரைச் சேர்ந்த தீரன் என்பவர், ஏடிஎம் வாகனத்தை ஒட்டிக் கொண்டு  வீரகனூருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தார். அந்த வாகனத்தில் ரூ. 1.21கோடி பணம் இருந்தது. அப்போது வீரகனூர்  தனியார் வங்கி ஏடிஎம் அருகே அலுவலர் குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த பணம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்-இல் நிரப்புவதற்குத்தான் ஆவணங்கள் இருந்தன. ஆனால்,  அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, சேலம் மாவட்டம் வீரகனூர் எடுத்து வருவதற்கோ, வீரகனூரில் உள்ள ஏடிஎம்-இல் நிரப்புவதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. அதையடுத்து பறக்கும் படையினர், ரூ. 1 கோடியே 21 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சேலத்திலிருந்து இரவு  வந்த வருமானவரித் துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT