சேலம்

சிறுமி கடத்தல்: காவல் துணைக் கண்காணிப்பாளர்அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

DIN

ஓமலூரில் சிறுமியைக் கடத்திய இளைஞரைக் கைது செய்து சிறுமியை மீட்டுக் கொடுக்குமாறு துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர் பேரூராட்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார். கடந்த 27-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே போன சிறுமியைக் காணவில்லை. இதனிடையே சிறுமியின் பெற்றோருக்கு வந்த மர்ம தொலைபேசியில் உங்களது மகளைக் கடத்தி விட்டோம் என்றும்,  கடத்தியது கணேசன் (24) என்றும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மகள் கடத்தப்பட்டது குறித்து  ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், புகார் கொடுத்து மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சிறுமியின் உறவினர்கள் ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அவர்களை அழைத்துப் பேசிய ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சமாதானப்படுத்தினார்.
ஓரிரு நாளில் மாணவியைக் கடத்திய இளைஞர் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT