சேலம்

இலுப்பை மரம் சாய்ந்தது

DIN

கெங்கவல்லி பேரூராட்சிக்குள்பட்ட இலுப்பைதோப்பு  பேருந்து நிறுத்தத்தின் பெயருக்கு காரணமான 100 ஆண்டு பழைமையான இலுப்பை மரம் காற்று மழையில் வேரோடு சாய்ந்தது.
கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை மாலையில் பெய்த காற்றுடன்கூடிய மழையில், மரம் வேரோடு சாய்ந்தது.  மரத்துக்குக் கீழ் இருந்த செல்லமேரி என்பவரின் வீட்டின் மேல் விழுந்தது.  மேலும்  அந்த மரத்தடியில்  நின்றுகொண்டிருந்த சிலர் மரம் விழுவதைப் பார்த்து அலறியடித்து ஓடினர்.  மரம் விழுந்ததால், இரு சக்கரவாகனமும் சேதம் அடைந்தது. இதுதவிர, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒரு மரமும், கெங்கவல்லி அரசு மருத்துவமனை முன்பு ஒரு மரமும், கெங்கவல்லி சிவன் கோயிலில் இருந்த இரண்டு மரங்களும் உள்பட மொத்தம் 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்தாலும், எந்த அசாம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT