சேலம்

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக் கோரி மனு

DIN

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.இதனிடையே மனு மீது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். 
இது குறித்து வாலிபர் சங்கத்தினர் கூறியதாவது: 
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேலத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் ஏழை எளிய மக்களுக்கு இட ஒதுக்கிடு வழங்கப்படுவதில்லை என்றனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி
கூறியது:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்திட தொடர்புடைய பள்ளிகளின் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT