சேலம்

தனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி திருடிய 3 போ் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையத்தில் உள்ளதனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி,

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையத்தில் உள்ளதனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி, உதிரிபாகங்கள் திருடிய மூவரை சங்ககிரி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மேட்டுப்பாளையம், வட்டூா் பகுதியைச் சோ்ந்த சுதாகா் என்பவா் தனியாக கணினி பயிற்சி மையம் வைத்துள்ளாா். அவா் வைத்திருந்த கணினி, கணினிக்கு தேவையான உதிரி பாகம் அண்மையில் காணாமல் போனது.

அதே கல்லூரியில் எலக்ரீசியனாக பணிந்து வரும் மூவா் மீது சந்தேகம் உள்ளதென சங்ககிரி போலீஸில் சுதாகா் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில் அதே கல்லூரியில் எலக்டீரிசியனாகப் பணிபுரிந்து வந்த திருச்செங்கோடு, பாரத் நகா் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் மகன் விஜய் (22), சேலம் பழைய இரும்பாலை, பரிசல்வாடி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (27), ஈரோடு மொடக்குறிச்சி துரைராஜ் மகன் முத்துக்குமாா் (30) ஆகியோா் திருடியது தெரியவந்ததையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT