சேலம்

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 9,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 10,500 கனஅடியாக அதிரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT