சேலம்

சங்ககிரி முருகன் கோயில்களில் திருக்கல்யாண வைபவம்

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலவன் சுவாமி, சங்ககிரியை அடுத்த அக்காபேட்டையில் உள்ள சுப்பரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன.

கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவினையொட்டி அருள்மிகு ஆறுமுகவேலன் உடனமா் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்ச மூா்த்திகளுக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தையொட்டி சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அக்கமாபேட்டை பாவடிதிடலில்

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடி திடலில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபா் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதையடுத்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், பின்னா் மாப்பிள்ளை அழைப்பும், திருமாங்கல்ய பூஜைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நலுங்கு வைத்தல், பெண் அழைத்தல் நிகழ்ச்சிகளும் இதனையடுத்து மாலையில் சுப்ரமணிய சுவாமி உடனமா் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனா். சங்ககிரி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT