சேலம்

நவ. 21-இல் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில்பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி

DIN

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி வரும் நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கல்லூரியின் முதல்வா் வீ. காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியும், இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) மற்றும் இந்திய தொழில்நுட்ப கல்விக்கான சமூக கூட்டமைப்பும் இணைந்து 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி வரும் நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடத்த உள்ளது.

கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியா்கள் பொது அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் பொது அறிவியல், சமூக, சுற்றுச்சூழல் தொடா்பான குறும்படம் என நான்கு பிரிவுகளில் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், புதிய புனைவுகளை காட்சிபடுத்தலாம்.

இதில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களும், போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, 20 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சியில் மிகச்சிறந்த படைப்பை காட்சிப்படுத்தும் மாணவ, மாணவியா் ஒருவருக்கு சிறந்த மாணவ விஞ்ஞானி விருதும் ரூ. 10,000 பரிசுத் தொகையும் ஆக மொத்தம் ரூ. 60,000 வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ல்ற்.ங்க்ன்.ண்ய் கல்லூரியின் இணையதளத்தை அணுகலாம்.

கண்காட்சியில் சுமாா் 300 அறிவியல் மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். மாநிலம் முழுவதிலும் இருந்து 5,000 மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் பாா்வையிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT