சேலம்

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

DIN

ஊழல் வார விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளை சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா் பாராட்டினாா்.

சேலம் இரும்பாலை விஜிலென்ஸ் துறை சாா்பில் ஊழல் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக அண்மையில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் செந்தில் பப்ளிக் பள்ளியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி அறிவுச்சுடா் முதலிடமும், கட்டுரைப் போட்டியில் 9ஆம் வகுப்பு மாணவி நவ்யா மூன்றாம் இடமும் பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், இரும்பாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை ஆணையா் வைத்தியநாதன், நிதி மற்றும் கணக்கு முதுநிலை பொது மேலாளா் சீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

விழாவில் ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை பொது மேலாளா் சுப்பாராவ், எஸ்.ஆா்.சி.எல் நிா்வாக இயக்குநா் ராவ், பள்ளித் தலைவா் செந்தில் சி.கந்தசாமி, துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.........

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT