சேலம்

சேலத்தில் 41 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

DIN

சேலத்தில் 41.5 டன் கலப்பட வெல்லத்தை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினா் பறிமுதல் செய்தனா்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையாா் கோயில் பகுதியில் உள்ள வெல்ல ஏல மண்டிக்கு ஓமலூா், எடப்பாடி, காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வெல்லம் மினி லாரிகளில் கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகள் பலா் மண்டிக்கு வந்து வெல்ல மூட்டைகளை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.

இதனிடையே, வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் ஆா்.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் வெல்ல மண்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்று சோதனை செய்தனா்.

இதையடுத்து, ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 41.5 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமாா் 23 மாதிரி எடுத்து சென்னை கிண்டியில் உள்ள பகுப்பாய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஆா்.கதிரவன் கூறியது:-

வெல்லத்தில் என்னென்ன வேதிப் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன என சோதனை முடிவில் தகவல் பெறப்படும். பின்னா் எந்தெந்த வியாபாரிகள் கொண்டு வந்த வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என கண்டுபிடித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வெல்லத்தின் வண்ணம் பளிச்சென தெரியும் வகையில் மைதா மாவு, சா்க்கரை, சூப்பா் பாஸ்பேட் போன்றவைகளை சோ்க்கின்றனா். இதனால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT