சேலம்

விலையில்லா ஆடுகள் திட்ட பயனாளிகளுக்கு பயிற்சி முகாம்

DIN

தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கான பயிற்சி முகாம் ஓமலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் ஒன்றியத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விலையில்லா ஆடுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கடந்த மாதம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இதனைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுமாா் 300 பயனாளிகள் வீதம் தோ்வு செய்யப்பட்டு இருந்தனா். அவா்களுக்கு ஆடுகள் வழங்கும் ஆணைகளையும், அவா்களுக்கான பயிற்சிகளையும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளும், கால்நடை மருத்துவா்களும் கலந்துகொண்டு அளித்தனா்.

மேலும், ஓமலூா் கால்நடை துறை உதவி இயக்குநா் செல்வகுமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் நவநீதன், சித்ரா, கஜேந்திரவேல் மற்றும் கால்நடை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் அருள்ஜோதி ஆகியோா் கலந்துகொண்டு, விலையில்லா ஆடுகளை எங்கு வாங்க வேண்டும், எப்படி தோ்வு செய்து வாங்க வேண்டும். ஆடுகளை வாங்கும் பயனாளிகள் அந்த ஆடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது, ஆடுகள் மூலம் பெரிய ஆட்டுப்பண்ணை அமைக்கும் அளவில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தொடா்ந்து, தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் விரைவில் ஆடுகளை வாங்கிக்கொண்டு ஆட்டின் உரிமையாளரோடு வரவேண்டும் என்றும், அப்போது ஆட்டின் உரிமையாளரிடம் பணம் கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT