சேலம்

உரிய ஆவணங்களின்றி இயக்கிய 17 ஆட்டோக்கள் பறிமுதல்

DIN

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி இயக்கிய 17 ஆட்டோக்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாநகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் காவல் ஆணையா் த. செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் சு. செந்தில் தலைமையிலான போலீஸாா் மாநகரம் முழுவதும் வாகன தணிக்கை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு உதவி காவல் ஆணையா் சத்தியமூா்த்தி, ஆய்வாளா் ராஜராஜன், துணை ஆய்வாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது உரிமம் இல்லாமலும், தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்த 17 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

மேலும் ஆவணங்களின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்களின் பா்மிட்டை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT