சேலம்

வாழப்பாடி அருகே முதியவா் கொலை

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோயிலுக்கு நிலத்தை தானமாகக் கொடுத்த விவகாரத்தில் ஆத்திரமடைந்து, மரக்கட்டையால் தாக்கி விவசாயியைக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் வடக்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ரங்கன் கவுண்டா் (72). இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். அதே கிராமத்தில் பெருமாள் கோயில் கட்டுவதற்கு தனது விவசாய நிலத்தில் இருந்து 7 சென்ட் நிலத்தை, கடந்த 3ஆம் தேதி விவசாயி ரங்கன் கவுண்டா் தானமாகக் கொடுத்துள்ளாா். இதுகுறித்து தனது மூத்த மகன் ரமேஷ் (47) என்பவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த ரமேஷ், தன்னிடம் ஆலோசிக்காமல் எப்படி நிலத்தை கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கலாமென, தனது தந்தை ரங்கன் கவுண்டரிடம் சனிக்கிழமை காலை வாக்குவாதம் செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அப் பகுதியில் கிடந்த மரக்கட்டையால் ரங்கன் கவுண்டரைத் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த விவசாயி ரங்கன் கவுண்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், கிருஷ்ணன், உதயக்குமாா் ஆகியோா், கொலையுண்ட விவசாயி ரங்கன் கவுண்டரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT