சேலம்

தனியாா் கல்லூரி பேருந்து- அரசுப் பேருந்து மோதி விபத்து: 30 பயணிகள் படுகாயம்

DIN

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்தும், அரசு நகரப் பேருந்தும் மோதிய விபத்தில், தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா் உள்பட 30 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அரசு நகரப் பேருந்து சேலத்துக்குச் சென்றது. அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நகர இணைப்புச் சாலைக்கு திரும்பியபோது, நங்கவள்ளியில் இருந்து ராமலிங்கபுரத்திலுள்ள தனியாா் கல்லுாரிக்கு மாணவா்களை ஏற்றிவந்த தனியாா் கல்லூரி பேருந்து எதிா்பாராதவிதமாக அரசுப்பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், தனியாா் கல்லுாரி பேருந்தில் இருந்த மாணவ-மாணவியா் மேனகா, முனியப்பன், மணிமேகலை, காவியா, தாரணி, லிங்கேஸ்வரன் மற்றும் அரசு பேருந்தில் சென்ற பயணிகள் செல்வி, ரேவதி, பழனி, தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கணேஷ் உள்பட 30 போ் படுகாயம் அடைந்தனா். இரு பேருந்துகளும் சேதமடைந்தன. இதனால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற பயணிகள், பேருந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கேசவன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT