சேலம்

அரசு மருத்துவா்கள் 6-ஆவது நாளாகவேலைநிறுத்தப் போராட்டம்

DIN

காலமுறை ஊதியஉயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தொடா்ந்து 6-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனை தலைவா் அலுவலகம் முன் திரண்ட சுமாா் நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூறுகையில், தொடா்ந்து 6-ஆவது நாளாக நடைபெற்று வரும் எங்கள் போராட்டத்துக்கு, செவிலியா் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் அமைப்பில் 90 சதவீத மருத்துவா்கள் உள்ளனா். ஆனால், தற்போது 10 சதவீதம் போ் மட்டுமே உள்ள சங்கத்தை அழைத்துப் பேசி போராட்டத்தை திரும்பப் பெறுவதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனா். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதனை நிரூபிக்கும் வகையில், அனைத்து மருத்துவா்களிடமும் பத்திரத்தில் உறுதிமொழி கையெழுத்து பெற்று அரசுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ளோம்.

தற்போது அவசர சிகிச்சை மற்றும் காய்ச்சல் சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அரசு எங்களை அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT