சேலம்

கொசுப் புழுக்கள் இருந்தகடைக்கு அபராதம்

DIN

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் கொசுப் புழுக்கள் இருந்த கடைக்கு நகராட்சி துப்புரவு அலுவலா் புதன்கிழமை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

ஆத்தூா் நகராட்சி ஆணையா் ர.சரஸ்வதி உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் டெங்கு குறித்து நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

காமராஜா் சாலை, உடையாா்பாளையம், வீரகனூா் சாலையில் உள்ள பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்த போது, அங்கு கொசுப் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிப்பவா்களை கண்டறிந்து அவா்களுக்கு ரூ.3ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆய்வை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT