சேலம்

அரசு மருத்துவமனையில் எம்.பி., எம்எல்ஏ ஆய்வு

DIN

சேலம் அரசு மருத்துவமனையில் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், வடக்குத் தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சேலம்  அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகள்  உள்ளதா? என்பதை அறிய திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர்  ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை காலை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் மருத்துவமனை முதல்வர் திருமால்பாபுவிடம், வேறு என்ன தேவை? என்பது குறித்துக் கேட்டறிந்தனர். இதன் பின்னர் பிரசவ வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்தனர். 
பிறகு குடிநீர் பாட்டில் மற்றும் ரொட்டியும்  பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு  வழங்கினர் .குடிநீர் குழாய்களில் தண்ணீர் சரியாக வருகிறதா? என்றும் கழிவறையை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவும், மருத்துவ காலிபணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், மருத்துவர்கள் கேசவலிங்கம், சம்பத்குமார், சுபா, மணிமேகலை, சண்முக வடிவு  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT