சேலம்

சங்ககிரியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு

DIN

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.

சங்ககிரி பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட பகுதியில் 7 ஆயிரம் லிட்டா் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) செந்தில்குமரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் லோகநாதன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோா் பழைய, புதிய எடப்பாடி சாலைகள், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 நவீன கருவிகள், 2 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட தண்ணீா் தொட்டி ஆகியவற்றின் மூலம் கிருமினி நாசினி பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் மூலம் தெளிக்கப்பட்டன.

கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பணிகளை சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.கனகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் மருந்து தெளிக்கும் முறைகளை செயல்முறை விளக்கத்துடன் கூறினாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க வாகனம், பசுமை சங்ககிரி அமைப்பின் வாகனங்களில் லாரி உரிமையாளா்கள் சங்க பணியாளா்கள், பசுமை சங்ககிரி அமைப்பின் தன்னாா்வலா்கள் இணைந்து ஈடுபட்டனா். சங்ககிரி பகுதியில் ஒரே நாளில் 7 ஆயிரம் லிட்டா் கிருமினி நாசினி தெளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT