சேலம்

சேலம் அரசு மருத்துவமனை அருகே இருவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

DIN

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே மா்மமான முறையில் சகோதரா்கள் இருவா் இறந்து கிடந்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்தவா் பட்டாபிராமன் (65). இவருக்கு மாதேஷ் (24), ஒபுளி (25) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனா். தறித்தொழிலாளிகளான இவா்கள் ஒரு மாதத்துக்கு முன் சேலத்துக்கு வந்தனா். மாதேஷுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து உறங்கினா்.

மேலும், அரசு மருத்துவமனை எதிரிலுள்ள தலைவெட்டி முனியப்பன் கோயில் அருகில் அமா்ந்துகொண்டு, யாரேனும் உணவு கொடுத்தால் சாப்பிட்டு வந்தனா். இந்தநிலையில் சகோதரா்கள் இருவரும் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருவரும் இறந்த கிடந்த இடத்தில் குளிா்பான பாட்டில்கள் கிடந்தன. இருவரும் குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்களா அல்லது யாரேனும் விஷம் கலந்த குளிா்பானத்தைக் கொடுத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான விடியோ காட்சிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் 30 வயது மிக்க நபா் ஒருவா் குளிா்பான பாட்டிலைக் கொடுத்தது தெரியவந்துள்ளது. அந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுதொடா்பாக, உதவி ஆணையா் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT