முகப்பு
சேலம்

சங்ககிரியில் கருணாநிதி நினைவு நாள்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாளையொட்டி சங்ககிரியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கல்
பகிர்:

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு நாளையொட்டி சங்ககிரியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி நகர திமுக சார்பில் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காயற்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

திமுக முன்னாள் தலைவர்  மு.கருணாநிதியின் நினைவுதினத்தினையொட்டி சங்ககிரி நகர திமுக சார்பில் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் நிர்வாகிகள் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் நகர செயலர் எல்ஐசி சுப்ரமணியம் சார்பில்  பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 80 பேருக்கு தலா ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் கொண்ட பைகளை சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து வழங்கினார். 

சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொ)கே.எம்.ராஜேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், முன்னாள் பேரூராட்சி செயலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.