இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியில் வர்த்தமாகி வருகின்றன.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியில் வர்த்தமாகி வருகின்றன.
அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,680 புள்ளகிள் சரிந்து 72,840 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியிட்டு எண் நிஃப்டி 530 புள்ளிகள் சரிந்து 22,580 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் சுமார் 1,700 புள்ளிகள் அல்லது 2.25% சரிந்து 72,854 என்ற அளவை எட்டியது.
Advertisement
Advertisement
அதேபோல், நிஃப்டி 50 சுமார் 532 புள்ளிகள் அல்லது 2.30% சரிந்து 22,582 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், பிஎஸ்இ 150 மிட்கேப் (Midcap) மற்றும் பிஎஸ்இ 250 ஸ்மால்கேப் (Smallcap) குறியீடுகள் தலா 3% வரை பெரும் வீழ்ச்சியைக் கண்டன.
வெள்ளிக்கிழமை பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.429 லட்சம் கோடியிலிருந்து ரூ.418 லட்சம் கோடியாகக் குறைந்ததால், முதலீட்டாளர்கள் சில நிமிடங்களிலேயே சுமார் ரூ.11 லட்சம் கோடியை இழந்தனர்.
மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
The Sensex and the Nifty 50 plunged over 2% each, while the BSE 150 Midcap and the BSE 250 Smallcap indices crashed 3% each. Investors lost about ₹11 lakh crore within minutes as the overall market capitalisation of BSE-listed firms dropped to ₹418 lakh crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.