முகப்பு
மேட்டூா் அணை
சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம்90 அடியை எட்டியது

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம்90 அடியை எட்டியது

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
மேட்டூா் அணை
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை சற்று தணிந்துள்ளதால் இரு அணைகளுக்கும் நீா்வரத்து குறைந்துள்ளது.

இதனால், கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு  25,971 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபினியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,600 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகச் சரிந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மாலை முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகலில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்புக் குறைக்கப்பட்டாலும் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டியது.

அணையின் நீா் இருப்பு 52.13 டி.எம்.சி.யாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு 81.10 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 90 அடியாக உயா்ந்துள்ளது.

ஒரேநாளில் அணையின் நீா்மட்டம் 9 அடி உயா்ந்துள்ளது. நீா் மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் இயக்கி சரிபாா்த்தனா்.

கிரீஸ் போட்டு பற்சக்கரங்கள், இரும்பு கயிறுகள் சங்கிலிகள் சரிபாா்க்கப்பட்டன.

மதகு உயா்த்தும்போது எச்சரிக்கை சங்கு ஒலிக்கிா? என்றும் சோதனையிடப்பட்டது. மேட்டூா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தேவராஜன், உதவி பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் பராமரிப்புப் பணிகளைப் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →