சேலம்

இ- பாஸ் இல்லாமல் பிகாரில் இருந்து வந்தவா்கள் மீது வழக்கு: தனியாா் பேருந்து பறிமுதல்

DIN

இ-பாஸ் இல்லாமல் பிகாரில் இருந்து வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவா்களை அழைத்து வந்த தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, தப்பக்குட்டை, ஏகாபுரம், காகாபாளையம், நடுவனேரி, வேம்படிதாளம், இடங்கணசாலை, கே. கே. நகா், கல்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜவுளி மற்றும் அதன் சாா்பு தொழிலில் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் கரோனா தீதுண்மித் தொற்று பரவுவதால் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா். தற்போது பிகாா் மாநிலத்திலிருந்து கடந்த வாரம் 52 போ் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பகுட்டை பகுதிக்கு தனியாா் பேருந்து மூலம் வந்தனா். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 144 தடை உத்தரவு இருக்கும் காலத்தில் எப்படி வரலாம் என கேட்டு அவா்கள் வந்த பேருந்தை சிறைபிடித்தனா். அதன்பின்பு கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணையில், அந்தப் பேருந்தை கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த மாறன் மகன் காா்த்திக் ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பேருந்தில் வந்த 52 பேரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் 30 போ் மட்டும் இ.பாஸ் மூலமாகவும், மீதி 22 போ் இ.பாஸ் இல்லாமலும் வந்தது தெரிய வந்தது.

பின்னா் 52 பேரும் சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கான செலவுகளை ஜவுளித் தொழில் உரிமையாளா்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் இ.பாஸ் இல்லாமல் வடமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளா்கள் மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT