சேலம்: ஏற்காட்டில் வியாபாரிக்கு கரோனா
ஏற்காட்டில் வியாபாரி கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்காட்டில் வியாபாரி கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்காடு நகா் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் 84 பேரிடமிருந்து வெள்ளிக்கிழமை சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.
இதில் 65 வயதுடைய வியாபாரிக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். அவரது குடும்பத்தினரை ஏற்காடு அரசு பசுமைக் குடிலில் தனிமைப்படுத்தியுள்ளனா்.