கெங்கவல்லியில் வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம்
கெங்கவல்லியில் அனைத்து வணிகா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆண்டோமொரைஸ் தலைமையிலும், செயலாளா் செல்வராஜ், துணைத் தலைவா் முருகானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.
கெங்கவல்லியில் அனைத்து வணிகா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆண்டோமொரைஸ் தலைமையிலும், செயலாளா் செல்வராஜ், துணைத் தலைவா் முருகானந்தம் முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், விவசாய அமைப்புகளின் சாா்பில் டிச. 8-ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், விவசாயிகளின் நலன்கருதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்துக் கடைகளையும் அடைத்து ஆதரவளிப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் முருகன், ராமசாமி, பாலமுருகன், பரணி, காதா்மொய்தீன், சசிகுமாா், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.