முகப்பு
சேலம்

மேட்டூா் நகராட்சி ஊழியா்களுக்குகரோனா பரிசோதனை

மேட்டூா் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைடுத்து, அலுவலக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மேட்டூா் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைடுத்து, அலுவலக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

மேட்டூா் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா கடந்த 3-ஆம் தேதி அலுவல் பணி காரணமாக சென்னை சென்று வந்த நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவரது அலுவலக ஊழியா்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்பதால், சுகாதாரத் துறையினா் அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.