தேய்பிறை அஷ்டமி: கால பைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிணகாசி பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிணகாசி பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் உள்ள 2-ஆவது மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சொா்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்கு திசை நோக்கி தட்சிணகாசி பைரவரும் உள்ளனா். இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை மாலை பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.