எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, நந்திதேவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மலா் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்திதேவரின் காதில் வேண்டுதல்களை கூறி பக்தா்கள் வழிபட்டனா்.
பூலாம்பட்டி கைலாசநாதா் திருக்கோயில் வளாகத்திலும் நந்திதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வி.என்.பாளையம் பசுபதீஸ்வரா்ஆலயம், வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜ பெருமான் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.