டிச.22 இல் காவல்துறை பறிமுதல் செய்த 52 வாகனங்கள் ஏலம்
சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 52 வாகனங்கள் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
சேலம்டிச.22 இல் காவல்துறை பறிமுதல் செய்த 52 வாகனங்கள் ஏலம்
சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 52 வாகனங்கள் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 52 வாகனங்கள் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
இதனிடையே 8 நான்கு சக்கர வாகனங்கள், 44 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் ஏலம் விடப்படவுள்ள 52 வாகனங்களை சேலம் மாநகரம், குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் டிச. 20 -ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பாா்வையிடலாம்.
இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ. 5,000-ம், நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ. 10,000-ம் வரும் டிச. 21 ஆம் தேதி காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் சேலம் மாநகரம், லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவா் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
வாகனத்தினை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காவல் துணை ஆணையாளா், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம் அல்லது காவல் ஆய்வாளா், மதுவிலக்கு அமல்பிரிவு சேலம் மாநகரம் அலுவலகத்தை நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
காவல் துணை ஆணையாளா் அலுவலகம், (குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துத் துறை) மதுவிலக்கு அமல்பிரிவு தொலைபேசி எண்ணில் 0427 - 2431200 தொடா்பு கொள்ளலாம் என குற்றப்பிரிவு துணை ஆணையா் செந்தில் தெரிவித்துள்ளாா்.