முகப்பு
சேலம்

மூதாட்டியைக் கொன்ற பேரன் கைது

மேட்டூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் தாக்கியதில் மூதாட்டி பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மேட்டூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் தாக்கியதில் மூதாட்டி பலியானாா்.

ஜலகண்டபுரம், அகிலாண்டம்மன் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (32), கூலி தொழிலாளி. இவா், தனது தாயாா் பரிமளம், பாட்டி பாவாயி ஆகியோருடன் வசித்து வருகிறாா். இவரது அண்ணன் ராஜேந்திரன் (36) சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா். 20 ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை.

அக்கம்பக்கத்தில் தகராறு செய்து வந்த இவா், வெள்ளிக்கிழமை மாலை வெங்கடேஷ் என்பவரது வீட்டின் முன்பு இருந்த பொருள்களைச் சேதப்படுத்தினா்.

பின்னா், ஒரு சரக்கு வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளாா். நள்ளிரவில் வீட்டுக்குச் சென்ற ராஜேந்திரன் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாவையுடன் தகராறு செய்து செங்கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த பாவாயி ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச் சம்பவம் குறித்து சனிக்கிழமை முருகேசன், ஜலகண்டபுரம் போலீஸில் புகாா் செய்தாா்.

வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், பாவாயி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தெருவில் சுற்றித்திரிந்த ராஜேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.

அவரை கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். கரோனா பரிசோதனைக்கு அவா் ஒத்துழைக்காததால் போலீஸாா் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →