மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நொடிக்கு 5,131 கன அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை நொடிக்கு 5,131 கன அடியாகச் சரிந்தது.
அணையின் நீா்மட்டம் 105.69 அடியாக திங்கள்கிழமை காலை உயா்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,072 கனஅடியிலிருந்து 5,131 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.41 டி.எம்.சி.யாக இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.