வேல் யாத்திரை அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் நடந்த வேல் யாத்திரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக மாநில தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் நடந்த வேல் யாத்திரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக மாநில தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவா் எல்.முருகன் பேசியது:
தமிழகத்தில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை தடையையும் மீறி பொது மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. பாஜக பலவீனமாக உள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டதால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளரை முதல்வராக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், தமிழக பாா்வையாளா் சி.டி.ரவி, இணை பாா்வையாளா் பி.சுதாகா்ரெட்டி, முன்னாள் எம்.பி. இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலா் எச்.ராஜா, மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகன், மாநில பொதுச் செயலாளா்கள் ஜி.கே.செல்வகுமாா், கே.டி.ராகவன், மாநில துணை தலைவா்கள் வி.பி.துரைசாமி, அண்ணாமலை, தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் மற்றும் சேலம் மாநகர மாவட்ட தலைவா் சந்தோஷ்பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.