முகப்பு
இந்தியா

பிகாரில் 21 ஆண்டுக்கால என்டிஏ ஆட்சி தோல்வியடைந்தது: தேஜஸ்வி!

மாநில வளர்ச்சியில் பின்தங்கிய பிகார்.. தேஜஸ்வியின் கடும் விமர்சனம்

Updated On : 12 மார்ச், 2026 at 12:14 PM
தேஜஸ்வி யாதவ் - dps
பகிர்:

பிகாரில் 21 ஆண்டுக்கால என்டிஏ ஆட்சி தோல்வியடைந்ததாக ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

மார்ச் 16ல் பிகாரில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.

பிகாரில் ஐந்து மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் என்டிஏ-விலிருந்து ஐந்து பேரும், ஆர்ஜேடியிலிருந்து ஒருவரும் என ஆறு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவின் எக்ஸ் பதிவில்,

இரட்டை இன்ஜின் அரசு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும் என்டிஏ அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியடைந்தது.

21 ஆண்டுக்கால என்டிஏ ஆட்சிக்குப் பிறகும் பிகார் பெரும்பாலான வளர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளது.

பிகார் என்பது என்டிஏவின் இரட்டை இன்ஜின் அரசு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு தனித்துவமான மாநிலமாகும், இருப்பினும் மாநிலம் இனனும் பல சமூக-பொருளாதார நிலையில் மோசமாகச் செயல்படுகிறது.

பிகார் நாட்டின் ஏழ்மையான மாநிலம். அதிக இடம்பெயர்வு, அதிக குற்றங்கள், ஊழல், அதிக வேலையின்மை, பல பரிமாண வறுமை, நாட்டில் பள்ளி இடைநிற்றல் விகிதம், குறைந்த கல்வியறிவு விகிதம் மற்றும் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நாட்டிலேயே விவசாயிகளின் வருமானம் மிகக் குறைவு, மிகக் குறைந்த தனிநபர் நுகர்வு, குறைந்த கணினி கல்வியறிவு, குறைந்த மின்சார நுகர்வு, அடிப்படை உள்கட்டமைப்பு, தரமான கல்வி மற்றும் குறைந்த தொழில்துறை அலகுகள் உள்ள மாநிலம் பிகார் என்று அவர் கூறினார்.

மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் யாதவ், மாநிலம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வளர்ச்சியிலும் பின்தங்கியுள்ளது.

அதிகாரத்துவக் கட்டுப்பாடு, மாநில வளங்கள் மற்றும் சாதி அரசியல் மூலம் நிர்வாகத்தை நடத்தும்போது அரசு பொறுப்புணர்வைத் தவிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

summary

Launching a frontal attack on the Bihar government, RJD's national working president, Tejashwi Yadav, on Thursday, alleged that the state has "failed" on all parameters during the 21 years of NDA rule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.