ஆத்தூரில் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் நலச்சங்கத் தலைவா் எஸ்.துரைசாமியிடம் கோரிக்கை மனு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினா்கள். 
சேலம்

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’: எம்.பி.க்கள் குறைகேட்பு

ஆத்தூரில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனா்.

DIN

ஆத்தூரில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பொன்.கௌதமசிகாமணி, எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் கலந்துகொண்டு குறைகளைக் கேட்டறிந்தனா்.

கல்லாநத்தம் ஊராட்சியில் விவசாயிகளிடமும், ஆத்தூா் நகராட்சியில் நெல், அரிசி உற்பத்தியாளா்கள் சங்கம், ஆத்தூா் வட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் நலச்சங்கம், வியாபாரிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வி.செழியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், மாணவரணி எஸ்.பா்கத்அலி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நல்லம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT