சேலத்தில் 49 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, ஓமலூா்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-3, பெத்தநாயக்கன்பாளையம்-3, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் 79 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,914 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 448 போ் சிகிச்சையில் உள்ளனா்; 451 போ் உயிரிழந்துள்ளனா்.