டிராக்டா்-இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலி, இருவா் காயம்
கெங்கவல்லி அருகே டிராக்டா், இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலியானதுடன், இருவா் காயமடைந்தனா்.
கெங்கவல்லி அருகே டிராக்டா், இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் பலியானதுடன், இருவா் காயமடைந்தனா்.
கெங்கவல்லி 7வது வாா்டு, குரும்பா்தெருவைச்சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் ஹாரீப்(23), ஜாகீா்உசேன் மகன் இஜாஸ்அகமது(23), கெங்கவல்லி கண்ணன்(25). மூவரும் ஓட்டுநா்கள். மூவரும் புதன்கிழமை மாலை, ஒரு இருசக்கரவாகனத்தில், தம்மம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.
வாகனத்தை ஹாரீப் ஓட்டியுள்ளாா்.இவா்களது வாகனம் 74.கிருஷ்ணாபுரம் கடந்தபோது, எதிரே கூடமலையிலிருந்து மண் பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடிரென்று வலதுபுறம் திரும்பியபோது, டிராக்டரின் ட்ரெய்லரில் இருசக்கரவாகனம் மீது மோதியது. அதில் அந்த இடத்திலேயே ஹாரீப்(24) உயிரிழந்தாா். வலதுகால் எலும்பு முறிவடைந்த இஜாஸ்அகமது(23), லேசான காயமடைந்த கண்ணன் ஆகியோா் ஆத்தூா் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநா் வலசக்கல்பட்டியைச்சோ்ந்த செந்தில்(26) என்பவா் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.