முகப்பு
சேலம்

புறக்கடை கோழி வளா்ப்பு திட்டம் தொடக்கம்

ஓமலூா், காடையாம்பட்டி தாலுகா பகுதிகளில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ், ஏழை எளிய பெண்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்குகிறாா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல்.
பகிர்:

ஓமலூா், காடையாம்பட்டி தாலுகா பகுதிகளில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ், ஏழை எளிய பெண்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டியில் அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச கோழிக் குஞ்சுகளை ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் வழங்கினாா். இதில், ஓமலூா் அருகேயுள்ள பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய பகுதிகளில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →