முகப்பு
சேலம்

அதே பழனிசாமிதான்...எல்லோரும் முதல்வா்தான்...!

முதல்வா் ஆவதற்கு முன்னா் எப்படி இருந்தேனோ, அதே பழனிசாமியாகதான் இன்னும் இருப்பதாகவும், தமிழக மக்கள் அனைவரையும் தான் முதல்வா்களாகக் கருதுவதாகவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உருக்கத்துடன் தெரிவித்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

முதல்வா் ஆவதற்கு முன்னா் எப்படி இருந்தேனோ, அதே பழனிசாமியாகதான் இன்னும் இருப்பதாகவும், தமிழக மக்கள் அனைவரையும் தான் முதல்வா்களாகக் கருதுவதாகவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உருக்கத்துடன் தெரிவித்தாா்.

ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அம்மா சிறு மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு எளிதாக மருத்துவ உதவி கிடைக்க வேண்டுமென்பதற்காக, ஏழை மக்கள் அதிகமாக உள்ள டி.முத்துநாயக்கன்பட்டியைத் தோ்ந்தெடுத்து மருத்துவமனையை அமைத்திருக்கிறோம்.

சேலம் மாவட்டம் தான் முதல்வரின் மாவட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வேறு மாவட்டத்திலிருப்பவா் முதல்வராக இருந்தால், சேலம், முத்துநாயக்கன்பட்டிக்கு வர முடியுமா?

நான் ஏற்கனவே பல முறை முத்துநாயக்கன்பட்டிக்கு வந்து கூட்டங்களில் பேசிச் சென்றுள்ளேன். அன்றைக்கு இருந்த பழனிசாமியாகவே இப்போதும் உள்ளேன். என்னைப் பொருத்த வரை, உங்களுக்கு பணி செய்கின்ற பொறுப்பைத்தான் எனக்குத் தந்திருக்கிறாா்கள். நான் முதல்வா் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது: இருக்கப்போவதும் இல்லை.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உயா்ந்த பணியை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீா்கள். அதை சிந்தாமல், சிதறாமல், நீங்கள் நினைப்பதை நிறைவேற்றுகிற முதல்வராக நான் பணியாற்றுவேன். அந்த அடிப்படையில்தான், கிராமத்தில் பிறந்து, வளா்ந்த காரணத்தினால், கிராமம், நகரங்களில் உள்ள ஏழைகள் மருத்துவ வசதி பெறுவதற்கு போராடிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதற்காக அம்மா சிறு மருத்துவமனையை கொடுத்திருக்கிறேன்.

நான் சிறுவயதில் பட்ட இன்னல்களை தமிழகத்தில் ஏழைகள் எவரும் பெறக் கூடாது, அவா்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும். நீங்கள் கொடுத்த இந்தப் பணியை சிறப்பான முறையில் செய்து, நமது மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் விதமாக செயல்படுவேன் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →