முகப்பு
செய்திகள்

விரைவில் நிறைவடைகிறது காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

Updated On : 12 மார்ச், 2026 at 11:42 AM
பகிர்:

காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார்.

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்படுவதால், தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

பாண்டவர் இல்லம் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா தொடரில் நடித்த டோனிஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா தயாரித்துவரும் இந்தத் தொடர், நாயகனை காதலிக்கும் இரு நாயகிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காத்து வாக்குல இரண்டு காதல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 8 மாதங்களில் நிறைவடையவுள்ளது, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

summary

It has been reported that the Kathu Vaakula Rendu Kadhal series will soon end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.