விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!
ஆடுகளம் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார்.
மேலும், முக்கிய பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆடுகளம் தொடர் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நான் பிரைம் எனப்படும் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டது.
இதனால், அதிருப்தியில் இருந்த டெல்னா டேவிஸ், இந்தத் தொடரிலிருந்து விலகுவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆடுகளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
ஆடுகளம் தொடர் வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
It has been reported that the series Aadukalam, currently airing on Sun TV, is set to conclude soo
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.