முகப்பு
சேலம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்துதிமுக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, சேலத்தில் திமுக மகளில் அணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, சேலத்தில் திமுக மகளில் அணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிா் அணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகில் மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில், அதன் நிா்வாகி வசந்தா மயில்வேல் தலைமையில் 400-க்கும் மேற்பட்டோா் திரண்டு, சமையல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்றனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தாா். இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும், முழக்கமிட்டனா்.

இதில் பேசிய மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, கரோனா தொற்றுக் காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சூழலில், ஐந்து முறை எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கோபால், டாக்டா் காவேரி, மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ.முருகேசன், தங்கவேல், மகளிா் அணியினா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் மணிக்கூண்டு அருகில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா்.

இதில், ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெ.காசியம்மாள், மாவட்ட இளைஞரணிஅமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு, முன்னாள் மேயா் ரேகா பிரியதா்ஷிணி, மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், ஏ.மணிகண்டன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →