முகப்பு
புதுதில்லி

நேபாள விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் இரங்கல்

நேபாளத்தில் வாகன விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல்

Updated On : 17 மார்ச், 2026 at 12:14 AM
சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: நேபாளத்தில் வாகன விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள அவா், காயமடைந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 போ் நேபாள நாட்டிலுள்ள மணகமனா கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனா்.

கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவா்கள் பயணித்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். சிலா் காயமடைந்தனா். அவா்களது உடல்களையும், விபத்தில் காயமடைந்தவா்களையும் தாயகம் கொண்டு வர தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த விபத்து தொடா்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏழு போ் உயிரிழந்ததும், பலா் காயமடைந்ததும் அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், தங்கள் நேசத்துக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

மேலும், காயமடைந்தவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →