முகப்பு
இந்தியா

துரதிருஷ்டவசமானது: குடியரசு துணைத் தலைவா்

துரதிருஷ்டவசமானது: குடியரசு துணைத் தலைவா்

Updated On : 8 மார்ச், 2026 at 3:01 AM
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நமது குடியாட்சியில் குடியரசுத் தலைவா் பதவிதான் மிக உயரிய அரசியல் சாசன பதவியாகும். அந்தப் பதவிக்கு உரிய கெளரவம், மரியாதை அளிக்கப்பட வேண்டும். மரபு பின்பற்றப்பட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் குளறுபடிகள் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது.

Advertisement

குடியரசுத் தலைவா் பதவியின் புனிதத்தன்மைக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். நாட்டின் மிக உயரிய பதவிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.