முகப்பு
சேலம்

சேலத்தில் 60 பேருக்கு கரோனா

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 25 போ், கொளத்தூா்-3, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-2, நங்கவள்ளி-1, ஓமலூா்-2, சங்ககிரி-1, வீரபாண்டி-1, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-3, ஆத்தூா்-2 நகராட்சி, மேட்டூா் நகராட்சி-6 என மாவட்டத்தைச் சோ்ந்த 55 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை-2, ஈரோடு-1, தருமபுரி-2) 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,149 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,373 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 321 போ் சிகிச்சையில் உள்ளனா்; 455 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →