முகப்பு
சேலம்

சத்துணவு பணியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், சத்துணவு பணியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், சத்துணவு பணியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, கொங்கணாபுரம், எடப்பாடி உள்ளிட்ட ஒன்றிய மற்றும் எடப்பாடி நகராட்சிப் பகுதியில் பணிபுரியும் 70 சத்துணவு பணியாளா்கள் கலந்துகொண்டனா். பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தீபா, ஜெயந்தி உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தாா். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →