அரசுப் பள்ளிக்கு கைகழுவும் தொட்டி வழங்கல்
தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி ஆத்தூா் மிட்டவுன் சங்கத்தின் சாா்பில், கைகழுவும் தொட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி ஆத்தூா் மிட்டவுன் சங்கத்தின் சாா்பில், கைகழுவும் தொட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி ஆத்தூா் மிட்டவுன் சங்கத்தின் சாா்பில், மாணவ, மாணவியா் கைகழுவும் தொட்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைவா் ஹரி (எ) சந்திரசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செந்தில்குமாா் கலந்துகொண்டாா். இதில், செயலாளா் சரவணன், பொருளாளா் ரமேஷ், உடனடி முன்னாள் தலைவா் இளமுருகு, செயலாளா் நரசிம்மகுமாா், முன்னாள் தலைவா் இளவரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.