முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே ஆண் குழந்தையின் உடலில் பகுதி மீட்பு: தேவூா் போலீஸாா் விசாரணை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும் அப்பகுதியில் கிடந்ததையடுத்து தேவூா் போலீஸாா் அதனை வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலத்தூா்ரெட்டிபாளையம் ஊராட்சி அருந்ததியா் தெரு பகுதியில் சனிக்கிழமை ஆண் குழந்தையின் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி இரண்டு கால்களுடன் தெரு நாய் இழுத்து வந்து அப்பகுதியில் போட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசராணை நடத்தி ஆண் குழந்தை உடலின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →